--- --:--:-- --

12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது..94.56 சதவீதம் தேர்ச்சி..!

2

மிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.

 

இந்நிலையில் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் மாணவிகளின் தேர்ச்சி சதவிகம் 94.56 %. மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

தேர்ச்சி பெற்றவர்கள் :7,19,196 – 94.56%

மாணவியர் 3,93,890 – 96.44% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 3,25,305 – 92.37% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர் 1 – 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் – 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,03,385. தேர்ச்சி பெற்றோர் 7,55,451. தேர்ச்சி சதவிகிதம் 94.03%.

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,532.

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,478.

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை  397.

Right Menu Icon