போரில் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு..!
இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் போரில் ரஷ்ய வீரர்கள் 12,000 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 14 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ வீரர்களும் ரஷ்ய படைகளை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள் .
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 12 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 303 பீரங்கிகள், 80 ஹெலிகாப்டர்கள், 48 ராணுவ விமானங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு கவச உடைகளையும் பல்வேறு திசைகளில் இருந்து வெளிக் கொண்டு செலுத்தும் ஐம்பத்தி ஆறு கருவிகளையும் சேதப்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






