விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் பள்ளி தலை நசுங்கி உயிரிழந்த சோகம்..!
பின்னால் வந்த வாகனம் மோதியதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்ற சிறுவன் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.
அரையாண்டு விடுமுறை காரணமாக இரு சக்கர வாகனத்தில் போரூர் ஆற்காடு சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது ஜெய்கணேசன் இருசக்கர வாகனம் மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்பொழுது பின்னால் அதிவேகமாக வந்தவன் ஜெய்கணேசன் தலைமீது ஏறி இறங்கியது. அதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக மாணவனின் உடலை கண்டு தாய் கதறி அழுவது காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.





