புனேவில் நூற்றில் 10 பேருக்கு கொரோனா…அதிர்ச்சி தகவல்!
நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 110 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகர் மும்பைக்கு அடுத்தபடியாக புனே நகரம் கொரொனாவின் இரண்டாவது ஹாட்ஸ்பாட் ஆக இருந்து வருகிறது.
ஆகவே அங்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கொரொனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த 17ஆம் தேதி பல்வேறு மையங்களில் சோதனை மேற்கொண்ட 5 ஆயிரத்து 507 பேரில் 565 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது 10.25 சதவீதம் அதிகமாகும். இவ்விஷயம் புனே மாவட்ட நிர்வாகத்திற்கும் மகாராஷ்டிர அரசுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து புனேவில் கொரொனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க புனே மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.







