தமிழகத்தில் இன்றும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு..! இன்னும் 2-ம் கட்டத்தில் தான் இருக்கிறோம்..! சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்!!
தமிழகத்தில் இன்றும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது எனவும், கொரோனா பரவல் 2-ம் கட்டத்தில் தான் உள்ளது எனவும் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக விறுவிறுவென அதிகரித்து வருகிறது. கடந்த 30-ந் தேதி 67 ஆக இருந்த பாதிப்பு 31-ந் தேதி 124 ஆக அதிகரித்த்து. 1-ந்தேதி மேலும் 110 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 2 3 4 ஆனது. நேற்று (2-ந் தேதி) மேலும் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 309 என எண்ணிக்கை உயர்ந்தது. இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம், டெல்லி நிஜாம்தீன் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்ந வர்கள் ஆவர்.அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஒரு வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் 2-ம் கட்டத்தில் தான் நீடிக்கிறது. சமூகத் தொற்றாக மாறவில்லை. எனவே சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் அவசியம் எனவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.






