மகாராஷ்டிராவில் 1,001 போலீசாருக்கு கொரோனா தொற்று!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,001 போலீசாருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 107 அதிகாரிகள் உட்பட ஆயிரத்து ஒரு போலீசாருக்கு உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அவர்களில் 851 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும், 142 பேர் குணம் அடைந்து விட்டதாகவும், 8 பேர் மரணம் அடைந்து விட்டதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் காவல்துறையினருக்கு எதிராக மாநிலம் முழுவதும் 218 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 770 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மகாராஷ்டிர காவல்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.






