--- --:--:-- --

தற்போதுள்ள கொரொனா எண்ணிக்கையைவிட 10 மடங்கு பாதிப்பு இருக்கலாம்..!

11

உலகளவில் தற்போது கொரொனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு பேர் அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

செய்தியாளரிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கொரொனா பரிசோதனை செய்யும் வசதி இருக்கும் பகுதிகளில் இருந்து தான் தற்போது கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்கள் கிடைத்து இருப்பதாக கூறினார்.

 

பல இடங்களில் பரிசோதனை வசதி இல்லாத நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் தற்போதைய எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மனிதர்களிடமிருந்து பூனை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் சௌமியா தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon