ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்காளர்கள்!
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். அதில், கர்நாடகாவில் 1 லட்சத்து 250 வாக்குகளில் திருட்டுத்தனம் நடந்துள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.
இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார்.






