1 கிலோ மாட்டு சாணம் 1லிட்டர் மாட்டு கோமியம் ரூ.500க்கு விற்பனை! கோமியத்துக்கு வந்த மவுசு!
கொரொனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தில் 500 ரூபாய் கொடுத்து சிலர் வாங்கிச் செல்கின்றனர். மாட்டு சாணம் மற்றும் கோமியம் ஆகியவை குணமாக்கும் என்ற வதந்தி பரவி வருகிறது.
இந்நிலையில் 2 மாடுகள் வைத்து வளர்த்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி என்பவரிடம் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய்க்கும் ஒரு கிலோ மாட்டு சாணத்தை 500 ரூபாய்க்கு வாங்கி செல்வதாக தெரிவித்துள்ளார். மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட இதில் பல மடங்கு வருமானம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மாட்டு சாணம் மற்றும் கோமியம் போன்றவை கொரொனாவை குணமாக்கும் என எந்த மருத்துவ அறிக்கையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






