நாளை ஜெலன்ஸ்கி முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து..!
நியூயார்க்: ரஷ்யாவுடனான போரை நிறுத்துகிறேன் என்று கூறி, உக்ரைனின் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கவும், அதன் மூலம் வரும் லாபத்தை பிரித்துக்கொள்ளவும் டிரம்ப் கணக்கு போட்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் நாளை ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார்.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. போருக்காக செய்யப்பட்ட செலவுக்கு பதிலாக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது.





