--- --:--:-- --

கொரோனாவிலிருந்து கிராம மக்களை காக்கும் பணியில் இறங்கிய இளைஞர்கள்!

4

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொரொனாவிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்குடி ஊராட்சியை சேர்ந்த காஞ்சிரன் வாயில் கிராமத்தில் கொரொனாவில் இருந்து மக்களை பாதுகாக்க இணைபிரியா இளைஞர் மண்டலத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.

 

கிராமத்திற்கு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து ஒரே ஒரு வழித்தடத்தை மட்டுமே ஊர் மக்கள் பயன்படுத்துவதை உறுதி செய்துள்ளனர். மேலும் கிராமத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை விதித்த தோடு அவ்வப்போது கிராமத்தில் கிருமினாசினியும் அவர்களே தெளித்துப் பயன்படுத்துகின்றன.

 

கொரொனா ஊரடங்கை பயன்படுத்தி ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Right Menu Icon