--- --:--:-- --

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட மூதாட்டி: 3 மாதங்களுக்குப் பின் வெளியான மர்மம்

2

நெல்லையில் 80 வயது மூதாட்டி சொத்துக்காக நஞ்சு கொடுத்து கொலை செய்யப்பட்டது 3 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. மண்ணுக்குள் இருக்கும் விதை மட்டுமல்ல, சில நேரத்தில் உண்மை வெளிவரவும் சிறிது காலம் தேவைப்படும். நெல்லை இராஜகோபால புரத்தை சேர்ந்த மூதாட்டி கொலை வழக்கில் உண்மையை கண்டறிய காவல்துறைக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது.

 

80 வயதான மூதாட்டி வெள்ளையம்மாள் என்பவருக்கு ஏகப்பட்ட சொத்தும், பணமும் இருந்தது. இளம் வயதிலேயே கணவரை பிரிந்து விட்ட அவருக்கு குழந்தைகள் இல்லை. வெள்ளையம்மாளின் சகோதரி மாப்பிள்ளையான தேவராஜ் என்பவரும், அவரது மகன் பிரகாஷ் என்பவரும் மூதாட்டியை கவனித்து வந்துள்ளனர். வீடு கட்டுவதற்காக வெள்ளையம்மாளிடம் தேவராஜன் 60 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது.

 

அவரது சகோதரர் கனகராஜ் என்பவரும் வெள்ளையம்மாளிடம் 20 லட்சம் ரூபாய் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக உறவினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு வெள்ளையம்மாளின் சொத்தை பிரித்து அவரது சகோதரியின் மகனுக்கு கொடுக்கும்படி தேவராஜை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

 

அப்போது தேவராஜ் தம்மை ஒழுங்காக கவனித்துக் கொள்வதில்லை என உறவினர்களிடம் வெள்ளையம்மாள் புகார் கூறியதாக தெரிகிறது. இதனால் தேவராஜ் மற்றும் உறவினர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை நடந்த இரண்டாவது நாளில் வெள்ளையம்மாள் உயிரிழந்துள்ளார்.

 

அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இறுதி சடங்குக்கு முன் மூதாட்டியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வெள்ளையம்மாளின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மூதாட்டி உயிரிழந்து மூன்று மாதங்கள் முடிந்த பிறகே உடற்கூறு அறிக்கை காவல்துறைக்கு கிடைத்தது.

 

வெள்ளையம்மாள் சாப்பிட்ட உணவில் நஞ்சு கலந்திருந்தது அதன் மூலமாக தெரியவந்தது. இதையடுத்து தேவராஜனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டது. காவல்துறை கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாலும், மேலும் பணம் தர மறுத்ததால் மூதாட்டியை கொலை செய்தேன் என தேவராஜன் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிகிறது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon