--- --:--:-- --

நமீதாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர்!

2

அமைதியாக இருப்பதால் என்னை பலவீனமாக எண்ணி விட வேண்டாம் என்று இளைஞர் ஒருவருக்கு நமீதா எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர் நமீதா. தன் கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கிறங்கடித்தவர். ஹாய் மச்சான் என்று பொது வெளியிலும் சினிமாவை தெறிக்கவிட்டார்.

 

எங்கள் அண்ணா, ஏய், பம்பரக்கண்ணாலே, பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில். கடந்த சில ஆண்டுகளாக பெரிய வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார் நமீதா. தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ள நமீதா, தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அதைத் தொடர்ந்து தனது நெருங்கிய நண்பர் வீரேந்திரசௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

மேலும் அண்மையில் தன்னை பாஜக உறுப்பினராக இணைத்துக் கொண்டடார். உடல் பருமன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த அவர் ஸ்ரீ மகேஷ் இயக்கும் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பட வாய்ப்புக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

இந்த நிலையில்தான் இளைஞர் ஒருவர் தமக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டியதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நமீதாவின் சமூகவலைத்தள கணக்கிற்கு தமிழ் செந்தமிழ் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் குறித்து செய்தி அனுப்பியுள்ளார். அந்த குறுஞ்செய்தியை பார்த்த நமிதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 

குறுஞ்செய்தி அனுப்பிய நபர் நமீதாவை தவறாக சித்தரித்து அனுப்பியிருந்தது தான் அவர் அதிர்ச்சி அடைய காரணம். இதனை கண்டு கொதித்தெழுந்த நமீதா அந்த நபருடைய முழு விவரத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒரு வாங்கு வாங்கிவிட்டார் என்று சொல்லலாம்.

 

அந்த நபரிடம் தாம் தொடர்பு கொண்டு கேட்ட போது தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து தவறான குறுஞ்செய்தி அனுப்பி விட்டதாக அவர் தெரிவித்ததாக பதிவிட்டுள்ள நமீதா இதுகுறித்து நமீதா தீர விசாரித்த போது தன்னுடைய ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப் போவதாகவும் அந்த இளைஞர் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மனம் வருந்திய நமீதா கவர்ச்சியாக நடித்தால் இப்படி பேசுகிறார்களா என தெரியவில்லை என்று குறிப்பிட்டு தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த இளைஞர் மலிவான மனநிலை கொண்டவர் என்றும் இதுதான் தோல்வியாளர்கள் எண்ணம் என்றும் கூறியுள்ள நமீதா பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கு பதிலாக பெண் கடவுளை வணங்குவதற்கு பதிலாக பொது வாழ்க்கையில் ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்று நல்ல ஆணுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon