--- --:--:-- --

நண்பனை பார்க்க சென்ற இளைஞர் வழியில் கொலை! யார் பெரிய ரௌடி என்ற கேள்வியால் விபரீதம்!

13

ஊரடங்கின் போது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. நண்பரைப் பார்க்கச் சென்றவர் சடலமாக திரும்பியதன் பின்னணி என்ன?

 

இந்த இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக விரட்டி கொலை செய்யப்பட்டதற்கு யார் பெரிய ரவுடி என்ற மோதல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், பாலாஜி நகரை சேர்ந்தவர் 52 வயதான எழுமலை, இவரது மகன் 24 வயதான பாலாஜி பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை காலை அதே பகுதியில் உள்ள தனது நண்பர்களை பார்ப்பதற்காக பைக்கில் பாலாஜி சென்றுள்ளார்.

 

சோலையம்மன் நகர் 9வது தெரு வில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை 6 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்தது. திடீரென வழிமறித்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் தப்பித்து பாலாஜி ஓட சாலையில் துரத்தி சென்று சரமாரியாக வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பட்டப் பகலில் அதிகம் வீடுகள் உள்ள பகுதியில் நடந்த கொடூர கொலையை பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 

ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழுந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாலாஜியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 6 பேரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் தாம்பரம் பகுதியில் பதுங்கியிருந்த காவாங்கரை சேர்ந்த சகோதரர்கள் இளையராஜா, மஹாராஜா மற்றும் அவர்களது கூட்டாளிகள் என 6 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் ஒரே ஏரியாவில் வசித்து வரும் பாலாஜியும் இளையராஜா தரப்பும் அடிக்கடி மோதிக் கொள்வதும் ரவுடி கும்பல் என்பது தெரியவந்தது. யார் பெரிய ரவுடி என்பதில் இரு தரப்பிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா தரப்பை தாக்க முயன்ற பாலாஜி மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கு பழிக்குப் பழி தீர்க்கவே பாலாஜியை எதிர்தரப்பினர் ஓட ஓட விரட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இளையராஜா, மகாராஜா அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

படித்து முடித்து வேலைக்கு செல்லும் வயதில் ஊதாரியாக சுற்றி ரவுடித்தனம் செய்து செய்ததில் ஏற்பட்ட மோதல் ஓர் இளைஞனின் உயிரை பறித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon