--- --:--:-- --

காவலர் தகுதி தேர்வின் போது உயிரிழந்த இளைஞர்..!

5

காவலர் தகுதி தேர்வின் போது ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பலியாகியுள்ளார்.

 

விருதுநகரில் உள்ள பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். அப்பொழுது அழகாபுரியை சேர்ந்த 21 வயதான மாரிமுத்து என்ற இளைஞர் 1500 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடும் போது திடீரென மயங்கி விழுந்தார்.

 

உடனடியாக அவரை மீட்ட காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவரின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon