சாதம் வடிக்கும் போது வடிக்கஞ்சி கொட்டியதில் இளம் பெண் மரணம்..!
கும்மிடிப்பூண்டியில் சோற்றை வடிக்கும் பொழுது வடிக்கஞ்சி கொட்டியதில் வட மாநில இளம்பெண் பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட்டில் இருந்து பெண் வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய 16 வயது மகள் நந்தினி கடந்த 14 ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஸ்டவ் அடுப்பில் இருந்து சோற்றை வடிக்கும் போது எதிர்பாராத விதமாக கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடலில் கொட்டியது. இதில் படுகாயம் அடைந்து அலறியவரை பெற்றோர் மீது சென்னை கீழ் பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வட மாநில குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





