--- --:--:-- --

கர்ப்பிணியை டோலிக்கட்டி ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்ற உறவினர்கள்..!

7

திருப்பூரில் உடல்நிலை சரியில்லாத கர்ப்பிணியை மலைவாழ் மக்கள் டோலி கட்டி தூக்கி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பத்துக்கு மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் சாலை அமைத்து தரவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். மக்கள் டோலி கட்டி சென்றனர். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை டோலி கட்டி தூக்கி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon