நீர் வீழ்ச்சியில் வழுக்கி விழுந்து உயிரிழக்கும் இளைஞர்கள்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரம் ஜகதாம்பா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் இளைஞர்கள் போதையில் வழுக்கி விழுந்து இறக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அங்கு வருபவர்களில் சிலர் மது குடித்துவிட்டு அருவியின் மேல் பகுதிக்கு செல்வது, ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடுவது என சேட்டைகள் செய்கின்றனர். அவர்களில் சிலர் பாறைகளில் இருந்து விழுந்து அகால மரணமடைந்த காட்சிகள் இணையத்தில் உலவுகின்றன.
இப்படிப் பட்ட குடிகார இளைஞர்களால் அங்கு வரும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர் என குற்றம் சாட்டப்படும் நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






