நாளை பொறுப்பேற்கிறார் ராணுவ துணை தலைமை தளபதி..!
இந்திய ராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பிஎஸ் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்புதுணைத் தலைமை தளபதியாக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டி இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து காலியாக இருந்த துணைத்தளபதி பணியிடத்திற்கு ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பொறியாளர்கள் பட்டாளத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ராணுவப் படையில் துணைத் தளபதியாகப் நியமிக்கப்படும் முதல் நபர் பிஎஸ் ராஜ் ஒன்றாம் தேதி இராணுவ துணை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.





