தான் காதலித்த பெண் தன் தம்பியை காதலித்ததால் இளைஞர் தற்கொலை..!
மதுரை பாலமேடு அருகே காதலித்த பெண் தம்பியுடன் சென்றதால் மனமுடைந்த அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பிகளான பெரியகருப்பன், சின்னக்கருப்பன்.
இதில் பெரியகருப்பன் காதலித்ததாக சொல்லப்படும் உறவுக்கார பெண் சின்னக்கருப்பனுடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த பெரியகருப்பன் தற்கொலை செய்த நிலையில் விஷம் அருந்திய காதல் ஜோடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.






