தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழையும், 24ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






