--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 6426 பேருக்கு கொரோனா பாதிப்பு…! 82 பேர் உயிரிழப்பு!!

12.2

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் உயிரிழப்பும் 82 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது . சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,927ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,72,883ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையிலான பலி எண்ணிக்கை 3,741ஆக உயர்ந்து உள்ளது. இதில் இன்று உயிரிழந்தவர்களில் 58 பேர் அரசு மருத்துவமனையிலும், 24 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.சென்னையில் இன்றும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து 1117 ஆக Uதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் 97,555 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 540, திருவள்ளூர் 382, நெல்லை 379, காஞ்சிபுரம் 373, விருதுநகர் 370, தூத்துக்குடி 316, மதுரை 225, குமரி 202 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon