ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு அளித்த இளைஞன் கைது.!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பள்ளி செல்லும் வழியில் தொந்தரவு அளித்த இளைஞன் மாணவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சந்தோஷ் என்பவர் மாத்தூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில தினங்களாக பள்ளி செல்லும் பொழுது வழிமறித்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை சந்தோஷை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சந்தோஷ்குமார் குற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.






