--- --:--:-- --

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அக்டோபர் 27 முதல் பதிவு செய்யலாம்..!

12

த்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவில் சேரும் மாணவர்கள் வரும் 27ம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானது. அதன் அடிப்படையிலேயே ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வுக்கு வரும் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 2ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்தது.

 

இதேபோல் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இவற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் குறித்து ஐந்தாம் தேதி அறிவிக்கப்படும் எனவும் 12ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கான மருத்துவ இடம் ஒதுக்கப்படும் எனவும் மருத்துவ கலந்தாய்வு குழு கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon