தமிழ்நாடு குறித்து யோகி பேசத் தேவையில்லை: கனிமொழி
தமிழ்நாடு குறித்து தேவையற்ற கருத்துகளை உ.பி. முதல்வர் பேசி வருவதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழ்நாட்டை பற்றி பேச எந்த உரிமையையும் யோகிக்கு இல்லை என்றார்.
1930களில் இருந்து மொழிக்காக தமிழ்நாடு போராடி வருகிறது என்றும் மும்மொழி கொள்கைக்கு கையெழுத்திடாமல் நிதியளிக்க மாட்டோம் என்றால் திமுக பதிலடி கொடுக்கும் எனவும் கூறினார்.






