கைகளை கிழித்துக்கொண்ட 40 பள்ளி மாணவர்கள்..!
குஜராத்தின் அம்ரேலியில் உள்ள முன்ஜியாசர் தொடக்கப்பள்ளியில் 40 மாணவர்கள் தங்கள் கைகளை கிழித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7ம் வகுப்பு மாணவன் ஒருவன் மற்றவர்களிடம், பிளேடால் கையை கீறிக்கொள்பவர்களுக்கு ₹10 கிடைக்கும் என்றும் செய்யாதவர்கள் ₹5 செலுத்த வேண்டும் எனவும் சவால் விட்டது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் Blue Whale Challenge-ஐ நினைவுபடுத்தியுள்ளது.






