நாடு முழுவதும் யோகா தினவிழா..!
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் எல்லாம் காலை முதல் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. யோகா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும் பங்கேற்று யோகா செய்தனர்.





