திருநங்கையாக மாறிய இளைஞருக்கு மஞ்சள் நீராட்டு விழா..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சிவகங்கையை மங்கையாக அங்கீகரித்து குடும்பத்தினர் நடத்திய மஞ்சள் நீராட்டு விழா உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் இந்திரா நகரில் வசிக்கும் கொளஞ்சி அமுதா இணையரின் மகள் நிஷா என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன் திருநங்கையாக மாறியுள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரது உணர்விற்கு மதிப்பளித்து பெயரை நிஷா என மாற்றியுள்ளனர். அவரது உருவத்தை கொண்டாடும் வகையில் அவருக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை மங்கையாக அங்கீகரித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் உடன் பயின்ற பள்ளி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் முதன்முறையாக திருநங்கை ஒருவரை அங்கீகரித்து அவருக்கு விழா நடத்தி இருப்பது சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தனர்.





