எழுத்தாளர் சங்கரிபுத்திரன் காலமானார்
எழுத்தாளர் சங்கரிபுத்திரன் (93) காலமானார். சென்னை மேற்கு மாம்பலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். எழுத்தாளர் சங்கரிபுத்திரனின் இயற்பெயர் வெ.சுப்பிரமணியன். அவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆரணிப்பட்டி. அவர் எழுதிய துணுக்குகள், ஆன்மிக செல்வர்கள் என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.





