பானிபூரி உருளைக்கிழங்கில் இருந்த புழு..!
சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் விற்கப்பட்ட உருளைக்கிழங்கில் புழு இருந்ததால் அதனை விற்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அரசியல் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர்களில் பலர் பசியால் இருந்ததால் உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரி வைத்து சாப்பிட்டுள்ளனர். அதற்குள் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
துர்நாற்றம் வீசிய உருளைக்கிழங்கு பல நாட்களுக்கு முன்பாக வேக வைக்கப்பட்டு அவ்வப்போது சூடு செய்யப்பட்டு தயார் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பானிபூரி விற்ற நபரின் கைகளை கயிற்றால் கட்டி வைத்து பாதிக்கப்பட்டவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






