--- --:--:-- --

கோவையில் ரோட்டரி கிளப் சாா்பில்,உலக தாய்ப்பால் தின கொண்டாட்டம்

grrf

கோவையில் ரோட்டரி கிளப் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணைந்து உலக தாய்ப்பால் தினத்தை கொண்டாடினர்.

 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவ மனையில் இன்று தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது.

ரோட்டரி கிளப் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை அரசு மருத்துவ மனையின் குழந்தைகள் நலத் துறை தலைவர் மருத்துவர் பூமா, தாய்ப்பால் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளுக்கும், 1.5 எடைக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியின் மூலம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டு மைக்ரோ பயாலஜிக்கள் சோதனை செய்யப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon