சுரங்கத்தில் சரிந்து விழும் தொழிலாளர்கள்.. மீட்க முடியாமல் தவிக்கும் மீட்புபடை..!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் 7 நாட்களாக தொழிலாளர்கள் சிக்கியுள்ளதில் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியின் பொழுது கடந்த 12ஆம் தேதி விபத்து ஏற்பட்டது.
இதில் சுரங்கப்பாதையின் நடுப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 60 அடி உயரத்திற்கு சுரங்க பாதை மூடியது. இந்த விபத்தில் நாற்பது தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் திரவ உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்து நார்வே நாட்டில் வந்த சிறப்பு குழுக்கள் மீட்பு பணியில் இணைந்துள்ளனர். சுரங்கப்பாதையில் சிக்கி உள்ளவர்களை மீட்க முடியாமல் ஏழாவது நாளாக திணறி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு தலைவலி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





