பெண்கள் டி சர்ட், மினி ஸ்கர்ட், லெகின்ஸ் அணிந்து வரக்கூடாது
மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு பெண் பக்தர்கள் மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் அணிந்து வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆண்கள் பாரம்பரிய வேட்டி சட்டை, முழுக்கால் சட்டை அணிந்து வர வேண்டும் கைலி, பெர்முடாஸ் மற்றும் பனியனை அணிந்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் பாரம்பரிய சேலை, ரவிக்கை, பாவாடை தாவணி, சுடிதார், துப்பட்டா அணிந்து வரவேண்டும். டீசர்ட், மினி ஸ்கர்ட் அணிந்து வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் துப்பட்டா இல்லாமல் மேல் சட்டை மட்டும் அணிந்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





