மனைவியின் உடலை அடக்கம் செய்த கணவர் கொரொனாவால் உயிரிழப்பு..! இறுதி சடங்கில் பங்கேற்ற 15 பேருக்கு தொற்று உறுதி..!
?????????????????????????????????????????????????????????
சென்னையில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்த அவரின் கணவர் கொரொனாவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னமராவதி அருகே மதியானை கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் கடந்த வாரம் சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறந்தவரின் உடலுடன் சென்னையிலிருந்து வந்த கணவர் உள்ளிட்ட எட்டு பேருக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது. அவர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கணவரான 72 வயது முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கனவே சிறுநீரக பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இறுதி சடங்கில் பங்கேற்றவர்களில் 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.







