--- --:--:-- --

பெண்ணை திருடி நாடக மாடிய பெண்! கணவர் தூக்கில் தற்கொலை!

11

தூத்துக்குடியில் வீட்டில் இருந்த 100 சவரன் நகையை பதுக்கி வைத்துவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடிய பெண்ணின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

தாளமுத்து நகரை சேர்ந்த துறைமுக ஊழியர் ஆன வின்சன் என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வின்சென்ட் கஷாயத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரது மனைவி ஜான்சியை நகை திருடியது தெரியவந்தது.

 

இதையடுத்து கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில் வின்சன்ட் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை மனைவி ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது வின்சன் மற்றொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon