--- --:--:-- --

குழந்தை இல்லாத விரக்தியில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை..!

3

சேலத்தில் திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத விரக்தியில் பெண் ஒருவர் மேம்பாலத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதா என்ற பெண் தனியார் மருத்துவமனையில் குழந்தையின்மைக்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

ஆனாலும் பலனளிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சேலம் ஐந்து ரோடு மேம்பாலத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

கீழே விழுந்து சுதாவின் இரண்டு கால்களும் முறிந்த நிலையில் உடலின் பிற பகுதிகளிலும் படுகாயம் ஏற்பட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Right Menu Icon