பெண்ணும் பெண்ணும் காதல்! ஆணாய் மாறி திருமணம் செய்த பெண்!
மதுரை மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் சட்டக்குழு ஆணையம் சார்பில் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த பவித்ரா என்பவரும், விஷ்ணுபிரியா என்பவரும் நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் இயற்கைக்கு மாறானது என கூறி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதுரை மாவட்ட சட்ட பணி ஆணைய குழுவை இருவரும் அணுகியுள்ளனர்.
அதன்பிறகு ஆணாக மாறிய விஷ்ணு பிரியாவும், பவித்ராவும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.





