பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்ட மந்திரவாதி கைது..!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தோசம் கழித்து குணப்படுத்துவதாக கூறி பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்ட மந்திரவாதி கைது செய்யப்பட்டான்.
நல்லூரில் பொது மக்களுக்கு குறி சொல்ல வந்த சக்திவேல் என்பவர் தனது மாந்திரீக சக்தியால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும் என கூறியிருக்கிறார்.
இதனை நம்பி பாதிக்கப்பட்ட குழந்தைகளை அழைத்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் தோஷம் கழிப்பதாக கூறி இவன் தவறாக நடக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த புகாரின் பேரில் சக்திவேலை போலீசார் கைது செய்துள்ளனர்.







