--- --:--:-- --

வில்சன் கொலை வழக்கு : மேலும் ஒருவர் கைது

1

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளரை வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தவ்ஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகிய இருவரை கைது செய்து குற்றப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்த களியக்காவிளை பகுதியை சேர்ந்த சையத் அலி என்பவரை போலீசார் தேடிவந்தனர். திருவனந்தபுரம் அருகே தலைமறைவாக இருந்த சையத் அலியை தமிழக கியூ பிரிவு போலீசார் மற்றும் கேரள போலீசார் விரைந்து கைது செய்தனர். அவரிடம் வில்சன் கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon