--- --:--:-- --

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் !!!

1

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது,அவர் சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்துள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும்,டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பு.அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வருகின்றது.டி.என்.பி.எஸ்.சி விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று அரசு விரும்புகின்றது. என்ன தவறு என்று காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.தவறில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

 

மேலும்,அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர்.காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால் பேரன் வயதில் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்தாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். அமைச்சர் அந்த செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,வறட்சி என்ற சொல்லே இந்த ஆண்டு இல்லை.நல்ல மழை பெய்து குளங்கள் நிரம்பி இருக்கின்றது எனவும்,அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பக்தி மான் என தெரிவித்த முதல்வர் அவர் மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது என தெரியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். அவர் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். அது அ.தி.மு.க-வின் கருத்து கிடையாது என்பதையும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கின்றார்.

 

மேலும்,9,11 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால் தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்.அந்த மாணவர் நமது ஊரில்தான் இருக்க முடியும். மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரும் பாஸ் செய்து விட்டால் அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய் விடும் எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,இடைநிற்றல் குறித்த புள்ளி விபரங்கள் யாரும் கொடுக்கவில்லை. இடைநிற்றலை தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

 

செய்தியாளர்கள் சந்திப்பின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,ஓ.கே.சின்னராஜ்,அம்மன் அர்ஜூனன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon