--- --:--:-- --

ஊதியம் தாமதமானால் அதிகாரிகள் ஏற்பார்களா? – நீதிபதி கேள்வி..!

4

ரி வசூலிக்க அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்த விமர்சனங்கள் பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது.

 

இதை தொடர்ந்து தொழிலதிபர்கள் பலரும் இறக்குமதிக்கு நுழைவு வரி வழக்கு தொடர்ந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியன் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது பெரும் பணக்காரர்கள் பலர் வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு நுழைவு வரி செலுத்தாமல் வழக்கு தொடர உள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

 

இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தள்ளுபடி செய்து விட்டபோதும் வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதி சாடியுள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர், அதிகாரிகள் ஒழுங்காக வரி வசூலிக்க வில்லை என்று வெள்ளை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ள தாகவும் நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

வரியை வசூலிக்காமல் இழுத்தடித்து வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு தாங்கள் உத்தரவிட்டதாகவும் அதன்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

சரியாக வரி வசூலிக்க அதிகாரிகளுக்கு நான்கு நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என கேட்ட நீதிபதி அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால் அரசை நடத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

 

வரி வசூலிக்க அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

 

Leave a Reply

Right Menu Icon