தமிழகத்தில் நாளை பேருந்துகள் ஓடுமா? ஓடாதா? இன்று முடிவு..!
போக்குவரத்து தொழில் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டியதை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் வேலையில் வேலை நிறுத்த போராட்டம் பொதுமக்களை பாதிக்கும் வகையில் அமையும் என கருதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்பொழுது உடன்பாடு எட்டப்படாத நிலையில் அரசு தரப்பில் இருந்து கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டு பேச்சு வார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் போக்குவரத்து கழக தொழிற்சங்கம் தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்து துறை இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.





