--- --:--:-- --

இரும்பு கம்பியுடன் பெண்களை விரட்டிய வட மாநில நபர்..!

7

ரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் படி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

வட மாநில இளைஞர் ஆன சச்சின் என்பவர் மதுபோதையில் கையில் இரும்பு கம்பியுடன் பேருந்து நிலையத்தில் வலம் வந்த நிலையில் பெண்கள் சிலரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

 

உடனே இளைஞரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த நிலையில் போலீசில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து இளைஞர்களும், போலீசரும் விசாரணை நடத்திய நிலையில் சம்பவம் குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon