திறப்பு விழாவிற்கு வந்த நடிகை.. ரசிகர்களின் செயலால் பரபரப்பு..!
ஜவுளி கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகையை காண குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஓமலூரில் தனியார் ஜவுளி கடை திறப்பு விழாவிற்கு திரைப்பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வருகை புரிந்தார்.
இவர் வருவதை அறிந்த போது மக்கள் பிரதான சாலையிலேயே காத்திருந்தனர். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கடைக்குள் செல்ல முற்பட்ட பொழுது ஏராளமான இளைஞர்கள் அவரை சூழ்ந்து நின்று செல்பி எடுக்க முற்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





