கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் தொல்லை அளித்த கணவனை கொன்ற மனைவி..!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் தொல்லை அளித்த கணவனுக்கு விஷம் வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மைக்கேல் பாளையம் சாலையில் வசித்து வந்தவர்கள் நந்தகுமார் மைதிலி .
ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் மைதிலி5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். 31 ஆம் தேதி நந்தகுமார் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது ரத்தத்தில் விஷம் கலந்து இருப்பது பரிசோதனையில் தெரியவரவே விவகாரம் போலீசாருக்கு சென்றுள்ளது. நந்தகுமார் தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கர்ப்பிணி என்றும் பாராமல் தொல்லை கொடுத்ததால் விஷம் வைத்துக் கொண்டதை ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.






