6 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி தலைமை செயலகத்தின் முன் சாலை மறியல்..!
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 6 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி தலைமை செயலகத்தின் முன் திடீரென சாலை மறியல் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்திற்கு சென்று முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டனர்.
அதற்கென உதவிக்கு வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் 50க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகத்தை நோக்கி சென்றுள்ளனர் .
உள்ளே நுழைய முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு திடீரென சாலை மறியல் செய்த சங்கத்தினரை காவலர்கள் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர்.






