--- --:--:-- --

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..!

8

மிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான கல்லாறு, வடுகபட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

 

சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.. அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி ஆகிய இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon