தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை ..!
விழுப்புரம், சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். விடாது பெய்த கனமழை காரணமாக சாலையோர மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





