--- --:--:-- --

காங்கிரஸுக்கு மட்டும் கூடுதல் தொகுதி வழங்கியது ஏன்?

7

தி.மு.க தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு மட்டும் கூடுதல் தொகுதியை வழங்கியது ஏன்? என்று தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடக்கூடிய தேர்போகி பாண்டிக்காக, அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியால் தமிழகத்துக்கு என்ன பயன் என்று நீங்களே சொல்லுங்கள். காங்கிரஸ் மத்தியில் 12 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. எந்த மாநிலத்திலும் காங்கிரஸை விரும்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.

 

 

தமிழகத்தில் மட்டும் 28 பேர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்கள். தி.மு.கவை பொறுத்தவரையில், அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிகளைக் குறைத்தார்கள். திருமாவளவன் உள்பட, மார்க்சிஸ்ட் மற்றும் கொங்குநாடு போன்ற அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதியைக் குறைத்த திமுக, காங்கிரஸுக்கு மட்டும் 3 தொகுதிகளைக் கூடுதலாகக் கொடுத்தது ஏன்? காங்கிரஸ் கட்சியின் அடிமை தி.மு.க என்பதை உணர்த்துவதற்காகத்தான் ஒன்றுமே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதாவது கடலில் கிடைத்த பெருங்காயம்போல உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் கூடுதலாகக் கொடுத்து உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரை பிரசாரத்துக்காக தமிழகம் வரவில்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon