--- --:--:-- --

மருத்துவமனை அருகே கிடந்த குழந்தையை வீசி சென்றது யார்..?

4

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனை அருகே கடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

வந்தவாசி அரசு மருத்துவமனை பின்புறத்தில் பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை கிடைப்பதை மருத்துவ உதவி ஆய்வாளர் இளையராஜா என்பவர் பார்வையிட்டுள்ளார்.

 

உடனடியாக அங்கு சென்று அவர் தொப்புள் கொடியுடன் இருந்த குழந்தையை மீட்டு பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து காவல்துறையில் இருக்கும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

பேருந்தில் சில மணி நேரம் பச்சிளம் குழந்தையை வீசி சென்றது யார்? தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றனரா அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினை காரணமா என்று கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon